வியாழன், 27 அக்டோபர், 2016

ஆனந்தம் கொண்டாடும்...

அன்பின் சக்திக்கு,
பண்டிகை கால நெரிசலில் சிக்கித்தவிக்கும் கடைவீதிகளும்,மற்ற நெருக்கடிகளில் மாட்டிக்கொண்டிருக்கும் எல்லாருக்கும் கவலைகள் இருக்கத்தான் செய்கிறது..



எல்லாவற்றையும் தாண்டி விழாக்களை விரும்பாத நாமும் உட்படத்தான் வேண்டியிருக்கிறது.

நமது தீபாவளி வாழ்த்துகளை நம் நண்பர்களுக்கு பரிமாறிக்கொள்வோம்.

சக்தி,
விழாக்களில் ஆரம்பம் மகிழ்ச்சியை கொண்டாடுவதில் ஆரம்பித்து,மகிழ்ச்சிப்படுத்துவதில் வளர்ந்து எங்கோ போய் நிற்கிறது.

கடைவீதிகளில் மழை வருமோ என பயந்து குடைகள் விற்றுத்திரியும் மனிதர்கள்..கிடைத்த மாடிப்படி சந்துகளில் கடைவிரித்து கூவிக்கொண்டிருக்கும் வியாபாரிகள்..
கடைசி நேர துணிக்கடை கும்பல்கள்..
அழுதுகொண்டே இன்னும் கொஞ்சம் பட்டாசு கேட்டு உருளும் சிறுவர்கள்..

முடிந்துவிடும் தீபாவளி..
தொடரும் நாட்கள் அத்தனை ஆரோக்கியமாக இருக்குமா?

மும்பையின் தீபாவளி பட்டாசுப்புகையை சுவாசிப்பவர் நூற்றும் மேலான சிகரெட் குடிப்பவருக்கு சமமாகிறார்.
சீனப்பட்டாசுகள் செய்யும் தீவிரம் இன்னும் அதிகம்..
ஒவ்வொரு வேட்டுக்கும் உள்ளம் நடுங்கும் ஒரு பறவையின் பரிதவிப்பை உணர்வோர்கள் பட்டாசு வெடிக்க மனம் வருமெனில் என்ன சொல்வது?

பட்டாசுக்குப்பைகள்...
பலகாரக்குப்பைகள் எல்லாம் சேர்ந்து தீபாவளிக்குப் பின் ஆஸ்பத்திரி கூட்டமே அதிகரிக்கும்...

சொந்த ஊர்ப்பயணங்கள் கூட்டங்களில் அத்தனை துயர் மிகுந்தவை தான்..
எல்லாம் தாண்டித்தான் கொண்டாட வேண்டியிருக்கிறது பண்டிகைகளை...

அண்மையில் படித்த செய்தி ஒன்று...
கேரளாவின் மருத்துவ, ஆபத்தான கழிவுகள் கோவையின் ஒரு கிராமத்தில் கொட்டப்பட்டிருக்கிறது..பல லாரிகள்,பல நாட்கள் ஒரு கிராமத்தை குப்பை மேடாக்கியிருக்கிறார்கள்..
உள்ளூர் நிர்வாகம்,மாநில எல்லைகடந்து வர அனுமத்தித்த நிர்வாகம்..
லாரிகண்ட இடமெல்லாம் கைநீட்டி கேட்கும் அதிகாரிகள்..
என்ன செய்து கொண்டிருந்தார்கள் இத்தனை நாளாய்?
மக்கள் கொந்தளித்த பின் அந்த கழிவுகளை மீண்டும் கேரளா அனுப்புகிறார்களாம்..
நேர்மையான அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
கழிவுகளோடு மிக ஆபத்தான அனுமதித்துக்கொண்டிருந்த அவர்களையும் ஏற்றி அனுப்பிவிடுங்கள்..

சரி சக்தி...
தீபாவளி வாழ்த்துகள்.

அன்புடன்,
செல்வக்குமார்.


2 கருத்துகள்:

  1. கழிவுகளோடு அவர்களையும் அனுப்பிவிடுங்கள் என்பது நல்ல யோசனை.

    பதிலளிநீக்கு

  2. பணத்தை வாங்கி கொண்டு குப்பைகளை அனுமதிக்கும் போது நம் தமிழர்களின் குப்பையான மனநிலை நன்றாகவே தெரிகிறது.

    பதிலளிநீக்கு