சனி, 30 செப்டம்பர், 2017

ரயிலோடும் முன்றில்...

நீளும்
இரவின் பயணத்தில்..

ஜன்னல்
காட்டும்
வெளிச்சப்
பொட்டுகளில்.
படிக்கலாம்,
எதிர் இருக்கைகள்
ஆராயலாம்..
சண்டைகளுக்கான
மூலப்பொருள்
தேடியெடுக்கலாம்..
தூரத்து தெரியும்
மலையுச்சி
கடவுளை நோக்கி
கரங்கள் குவிக்கலாம்.
சலசலத்தோடும்
நதிப்பாலக்குளிரில்
கொஞ்சம்
நடுங்கலாம்..
கண்கள்
கெஞ்ச
தூங்கவும்
செய்யலாம் நீ.

நீள ரயில் நிற்கும்
முன்றிலில்
காத்துக்
கொண்டிருப்பதே
போதுமெனக்கு..


4 கருத்துகள்:

 1. வணக்கம் !

  அவள் வரவை எதிர்பார்த்து அருமை !

  தம முதல் வாக்கு

  பதிலளிநீக்கு
 2. காத்திருத்தலின் வரத்தையும் சாபத்தையும் அழகாய் சொன்ன கவிதை ! அவளின் நினைவு மட்டுமே வரம் என்றால் மற்றதை மறப்பது சாபம் என கொள்ளலாம் தானே ?!

  நன்றியுடன்
  சாமானியன்

  எனது புதிய பதிவு " ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் ! "
  https://saamaaniyan.blogspot.fr/2017/09/blog-post_29.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும். நன்றி.

  பதிலளிநீக்கு