செவ்வாய், 10 நவம்பர், 2015

ஒரு ஊர்ல....ஒரு ராஜாவாம்...


நம்ப முடியாத
ராஜாக்கள் கதை
கேட்டதில்லை.
நிலவோடமர்ந்து
உண்டதில்லை. கோலமிடக்கற்றாளில்லை,
தாயம்,
பல்லாங்குழியென
பயிலவில்லை.
இறைவணக்கம் இல்லை,
தாவணி தரித்ததில்லை.

தாத்தாக்கள்
இருந்திருந்தால்...
எல்லாம்
தெரிந்திருக்குமோ
என்கிறாள்
சின்னவள்.

யாரும்
நமக்குள்  வேண்டாம்
என்கிறேன்.

சொர்க்கம்
உன்னைத்
தொலைத்தவர்கள்..

நரகத்தில்
இருப்பார்கள்...

14 கருத்துகள்:

  1. ஆஹா! அட! போட வைக்கின்றது தங்களது பெரும்பாலான கவிதைகள்....அருமை...

    பதிலளிநீக்கு
  2. சகோ செல்வா....ஒரு சின்ன வேண்டுகோள். நீங்கள் எங்கள் தளத்தில் நான் எழுதிய கதைக்கு நீங்கள் இட்ட பின்னூட்டம் அறியாமல் டெலிட் ஆகிவிட்டது. இத்தனைக்கும் ஒரே பின்னூட்டம் இரண்டு இருந்தது. தயவாய் மன்னித்து விடுங்கள். மீண்டும் இட முடியுமா சகோ...தாழ்மையான வேண்டுகோள்..

    கீதா

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான்
    அன்பைத் தொலைத்தவர்களுக்கு
    சொர்க்கத்தில் ஏது இடம்
    அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  4. சின்னவள் சிரிக்கிறாள் பரிசுப் பெற்ற கவிதையிலிருந்து உங்களின் கவிதைகளை படித்து வருகிறேன். கவிதைகள் ஒவ்வொன்றும் தேனாய் தித்திக்கிறது.
    தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய மகிழ்வாய் இருக்கிறது...உங்கள் வருகையும் வாழ்த்தும்..நன்றி

      நீக்கு
  5. அருமை நண்பரே மிகவும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  6. அதற்குத்தான் மிகச் சிறிய வயதில் அவளுக்கு புத்தகங்கள் பழக்கினேன்...அவள் இன்று புத்தகமும், வாழ்க்கையும், அறிவாகவும், அன்பாகவும், அதே சமயத்தில் சமயோஜித புத்தியுடனும் வாழ்வதற்கு அந்தப்புத்தகங்கள் தான் காரணம்..தாத்தா இருந்திருந்தால் ஒருவேளை இது கிடைத்திருக்காதோ என்னவோ???

    பதிலளிநீக்கு
  7. ம்ம்ம் அழகு சின்னவளும் அவளுக்கென எழுதப்படும் அத்தனைக்கவிதைகளும்

    பதிலளிநீக்கு