சனி, 28 நவம்பர், 2015

விடைகொடம்மா....

கதவிடுக்கில்
தெரிகிறது
சோகமுகம்...

விடைகொடுக்க
மறுக்கிறாள்.

கெஞ்சுகிறேன்.
சிறு புன்னகையும்
இல்லை...

பேருந்து
சுமக்கும்
என்னை...
இதோ
இப்போது
இறக்கிவிடும்.

எப்படி
இறக்கிவைக்கப்
போகிறேன்?
அந்த இறுக்கத்தை..

வயிற்றின்
பசிக்கு
பணம்தேடி..

வாழ்தலின்
நிமித்தம்.
சின்னவள்
வேண்டும்.

சிரித்துக்கொண்டே...

11 கருத்துகள்:

  1. இரக்கமே இல்லை இந்த இறுக்கத்திற்கு சின்னவளைப்போல மனதை இறுகப்பற்றிக்கொண்டே உடன் வருகிறது!

    பதிலளிநீக்கு
  2. பிரிவின் வை சொல்ல முடியாத ஒன்றாய்..

    பதிலளிநீக்கு
  3. பிரிவு தரும் கனம்.... கவிதையாக...

    நல்ல கவிதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. வயிற்றின் பசிக்கு பணம்தேடி வாழ்தலின் நிமித்தம் சுன்னவள் வேண்டும் மாறாச்சிரிப்போடு.... அருமை

    பதிலளிநீக்கு
  5. ஆனால் அவள் இப்போது வருத்தத்தில்....அவளுக்கு அப்பா தான் அருகில் இருக்க வேண்டுமாம்..அம்மாவை விட

    பதிலளிநீக்கு
  6. பாருங்கள் அப்பா இங்கே கவிதையில் அழுகின்றார் அங்கு சின்னவள் வருந்துகின்றாள்....பிரிவின் துயர்....

    பதிலளிநீக்கு