எப்போதோ செய்த
தெர்மாகோல்
சூரிய குடும்பமொன்று
அவள் பெயருக்கு 
மாறியிருக்கிறது.
சூரியனாய் 
அவளிருந்து 
சுற்றும் 
கிரகங்களுக்ககு 
பெயரிட்டவள், 
சனியை 
எனக்கெனத் 
தந்திருக்கிறாள்...
கோபமேறிய
என்னைக்
கொஞ்சுகிறாள்
சின்னவள்,
சனிக்குத்தானடா
கிரீடமிருக்கிறதென,...
 
தாங்கள் ராஜாதான்
பதிலளிநீக்குகவி ராஜாதான்
ராஜா என்பதில் சந்தேகமேயில்லை...
பதிலளிநீக்குஉண்மைதான் சனிக்குதானே கீரிடம் இருக்கிறது. சரியாகத்தான் சொல்லியிருக்கிறாள் சின்னவள்.
பதிலளிநீக்குஅட! உண்மைதானே! சனிக்குத்தானே கிரீடம்! உங்கள் சின்னவள் உங்களை ரொம்பவே எழுத வைக்கிறாள்!!
பதிலளிநீக்குஅடடா..எல்லாரும் அவள் கட்சிக்கா....
நீக்குசூரியனாய் அவள் இருந்தாள்.. பிடிக்காதவர்களை சுட்டு பொசுக்கி விடுவாளே...????
பதிலளிநீக்குஆஹா.....செய்வாளய்யா....
நீக்குசின்னவள் தொடர்ந்து சிரிக்கட்டும் நண்பரே...
பதிலளிநீக்கு