வியாழன், 29 அக்டோபர், 2015

ஒற்றைப்பருக்கை....

ஆழித்துரும்பாய்
அங்கிங்கெனாது
ஆடிக்களைத்து,


உதடுகளில் சிரித்து,
உறவுகளில் நாடகமிட்டு,
உந்தித்தள்ளும்
நாட்களின் 
உராய்வில் சுடும் நெருப்பில் கனலாகி.
உள்ளே உள்ளே உள்ளே,
தேடியெடுத்த எல்லாம்
அனுபவங்கள்.
தகிக்கும் பாலைச்சூட்டில்,
திரௌபதிப் பாத்திரத்தின்
ஒற்றைப்பருக்கையாய் இருக்கிறாள்
சின்னவள்.

அவளைப் பார்த்தலில்
ஆறுகிறது வாழ்க்கைப்பசி.......
9 கருத்துகள்:

 1. முதல் வரியில் விரிந்த என் விழிகள் தகிக்கும் பாலைச் சூட்டில் பொசுங்கி வீழ்ந்தன.. இவ்வளவு அடர்த்தியான கவிதையைப் புரிந்துகொள்ள படிப்பவர் அனைவரும் உங்கள் அனுபவத்தைக் கோர முடியாதே கவிஞரே!
  பொதுமைப் படுத்திப் படையுங்கள்.. உலகம் விழிக்கட்டும்

  பதிலளிநீக்கு
 2. உங்களின் பின்னூட்டம் ஒன்றிலிருந்து வருகிறேன்.

  சின்னவளின் ஒற்றைப் பருக்கை உலகத்தின் அத்தனைக்கும் ஈடில்லாததுதானே?

  தொடர்கிறேன்.

  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிள்ளிப்பார்க்கிறேன்...இது கனவல்ல....இன்று இன் வலைக்கு நல்லவேட்டை....ஆயின் உங்கள் அன்பு வலைகளுக்குள் நான்...நன்றி

   நீக்கு
 3. சின்னவள் சிரிக்கிறாளின் அந்தச் சின்னவளின் ஒற்றைப்பருக்கை! அட!

  பதிலளிநீக்கு
 4. அவளைப் பார்த்தலில்
  ஆறுகிறது வாழ்க்கைப்பசி.....//..
  ஆம் எங்களிற்கும் மகன் வழிப் பேரர்கள் இருவர்
  வாழ்வில் தேனூற்றுகிறார்கள்..

  பதிலளிநீக்கு
 5. ///திரௌபதிப் பாத்திரத்தின்
  ஒற்றைப்பருக்கையாய் இருக்கிறாள்
  சின்னவள்.///
  ஆகா அற்புதம் நண்பரே

  பதிலளிநீக்கு