புதன், 28 அக்டோபர், 2015

அடி சறுக்கும்....

விஞ்ஞானம்
எந்த நாளும்
விடை காணமுடியாத,
வீட்டின் சமர்கள்
எப்படியும் நிகழ்ந்தே விடுகிறது.


அடங்க மறுத்தும்
அடக்கா நிலையிலும்
வலுத்துவிடுகிறது இரவு.
சப்தங்கள் வலுக்கும்போது
சட்டென விழிக்கிறாள்
சின்னவள்.
துளிர்க்கத்தொடங்குகிறது
விழியோரம் ஈரம்...

ஒரு யானையாய்
ஒடுங்கிப்படுக்கிறேன்.

11 கருத்துகள்:

 1. விழியோரம்
  துளிர்க்கும் ஈரம்
  சொல்லாமல் சொல்லுகின்றது
  அன்பை, தங்களது மனதை
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 2. அந்தப் பாசத்தில்தான் நம் உயிர்கள் இன்னும் நம் உடலில் ஒட்டியிருக்கிறது கவிஞரே! உயிர் வளர்க்கும் கவிதை தமிழையும் வளர்க்கட்டும்.

  பதிலளிநீக்கு
 3. சின்னவள் தங்களை நிறைய கவிதை வார்க்க உதவுகின்றாள்! இல்லையா!?! எல்லாம் அந்தப் பாசம் செய்யும் வேலை...!!

  பதிலளிநீக்கு
 4. எல்லாம் அந்தப் பாசம் செய்யும் வேலை...!!#உண்மை...

  பதிலளிநீக்கு
 5. ஒரு பார்வை
  ஒரு அசைவையும் வரியாக்கும்
  திறமை அருமை...
  ரசனை!..

  பதிலளிநீக்கு