வெள்ளி, 30 அக்டோபர், 2015

இதுகூடவா செய்யமாட்டேன்?....

சின்னவள்
ஒருபோதும் காட்டியதில்லை மதிப்பெண் பட்டியலை.

என்ன பிரிவென்பதும்
இன்னும்
தெரியாதெனக்கு.

அவள் அம்மாவினால் அர்ச்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறாள்.

மெல்லச் சொல்லிவிட்டு போகிறேன்.

இனி என்னிடம் வா..
எத்தனை
கையெழுத்து வேண்டும்.

9 கருத்துகள்:

 1. அதானே...!

  (அம்மாவை மீறி கையெழுத்து...? ஜாக்கிரதை...!)

  பதிலளிநீக்கு
 2. ஹஹஹ் சின்னவள் தொடர்ந்து கொண்டிருக்கின்றாளே! செல்லமோ?!!!

  பதிலளிநீக்கு
 3. ஓம்!...... புறொகிறஸ் றிப்போட்டுக்கு பெரிய பாடு தானே!..
  அந்தக் கால நினைவுகள் வருகிறது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அம்மா......அடிக்கடி இந்த மகனின் வலைப்பூவுக்கும் வந்து போங்கள்....

   நீக்கு
 4. பதில்கள்
  1. என் வரிகளையும் வாசித்து எழுதும் உங்கள் கருணையை விடவா ஐயா?....மிகுந்த மகிழிச்சி...
   இந்த சின்னவன் உங்கள் அரவணைப்பில் .....

   நீக்கு
 5. சின்னவளின் சிந்தனையே
  சுவாசிக்கும் சுவாசமாய்
  மாறியது புரிகிறது

  பதிலளிநீக்கு