வெள்ளி, 1 ஜனவரி, 2016

என்னைக்கட்டிய நூல்

புத்தாண்டில்
ஒரு
புத்தகம்
சுமந்து
வந்திருக்கிறேன்

இதைவிடவா
வேறெதுவும்
பரிசு
இருக்கப்போகிறது?

இருநூற்றுப்பதினாறு
பக்கங்களில்
ஒரு
ஞானநதி
பிரவாகம்
எடுத்திருக்கிறது.

பதினாறு
அத்தியாயங்களில்
ஒரு
பகீரதப்பிரயத்தனம்
நடந்திருக்கிறது.

பெண்கவிகளில்
கசியத்தொடங்கிய
உண்மை
கணினியில்
கரைகடந்திருக்கிறது.

கம்பனைத்தழுவிய
கைகள்
கார்ல்மார்க்ஸின்
கரங்களை
குலுக்கியிருக்கிறது.

கா.நா.சு
எழுத்துக்களின்
அழுக்கெடுத்த
விரல்கள்
கண்ணதாசனுக்கு
சொடுக்கெடுத்திருக்கிறது

உயிராம்
குறளின்
திறனறிந்த
சிந்தை
மயிர் விளைந்த
கவிகளுக்கும்
பூச்சூட்டி
ரசிக்கிறது.

ஜெயகாந்தனை
ஜெயகாந்தனின்
படைப்புகளே
பேசும் அதிசயம்.
அவர் எழுத்தின்
போக்கை
இப்படி
யாரும்
இதுவரை
சொன்னதில்லை.

நெட்டுயிர்க்கிறேன்.

நல்ல எழுத்தாளர்
ஆழ்ந்த
சிந்தனையாளர்

நகைச்சுவை
பேச்சாளர்
எனும்
மாயத்திரை
விலக்கி...

எழுத வேண்டியது
இன்னுமிருக்கிறது.

முடியும்....

அவர்
நா.முத்துநிலவன்.

என்னைக்கட்டிய
நூல்

கம்பன் தமிழும்
கணினித்தமிழும்.

14 கருத்துகள்:

 1. அன்பின் செல்வா!
  ஆண்டுத் தொடக்கத்தில் இப்படி இன்ப அதிர்ச்சியா?!
  ஒரேநாளில் வெளிவந்தாலும், முமஎவே நூலின் வியத்தகு வரவேற்பில் இந்த நூல் சரியாகப் போகவில்லையோ என்றிருந்தேன்.
  எனினும், நூலின் முதற்பதிப்பு முற்றிலும் தீர்ந்துவிட்டது.
  அடுத்த பதிப்பில் இந்த அறிமுகக்கவிதையைச் சேர்க்கப் பதிப்பாளர்க்குப் பரிந்துரைப்பேன்.
  “எழுத வேண்டியது
  இன்னுமிருக்கிறது” நான் மட்டுமல்ல, நீங்களும்தான்
  என் இனிய நண்பா!
  இயலும்வரை இணைந்து செல்வோம்.
  நன்றியெல்லாம் சொல்லப்போவதில்லை,உங்கள் கைகளை எடுத்து என் உள்ளங்கையில் வைத்துக் கொள்கிறேன்..

  பதிலளிநீக்கு
 2. அருமையான புது வருடத் துவக்கம் ஐயா..அந்த நூல் கிடைத்தால் படிக்கிறேன் ஐயா..

  நன்றி..வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 3. விரிவாக எழுதுவீர்கள் என்று எதிர் பார்க்கிறேன் நண்பரே

  பதிலளிநீக்கு
 4. நல்ல அறிமுகத்துடன் புத்தாண்டு மலர்ச்சி!!! நிச்சயமாக ...இங்கு ஒரு பார்சல்! புது பதிப்பு வந்ததும்...நாங்கள் அனுப்புகின்றோம் அதற்கான விலையை.

  பதிலளிநீக்கு
 5. அருமையான நூல் நண்பரே
  படித்து மகிழ்ந்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 6. கவிதையாய் எழுதியிருக்கீங்க...
  ஐயாவின் புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை...
  இங்கிருந்து ஊருக்கு வரும்போது இந்த முறையேனும் புதுக்கோட்டை வரவேண்டும்... புத்தகங்களுகாகவாவது... :)

  கொஞ்சம் விரிவாய் எழுதுங்களேன்... எங்களுக்கும் அந்த அனுபவம் கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 7. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

  - சாமானியன்

  எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

  பதிலளிநீக்கு
 8. மிக அருமை சகோ.. நானும் எழுத வேண்டும் என்று நினைத்து இன்னும் எழுதவில்லை. அண்ணனின் இந்த நூலைப் படிக்கும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது, பொக்கிஷமாய் வைத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 9. நானும் எப்போதோ படித்து விட்டேன். மிக சிறந்த சிந்தனையாளர் ஆய்வாளர் என்று ஒவ்வொரு கட்டுரையும் சொல்லும்

  பதிலளிநீக்கு
 10. சகோராரிற்கு இனிய வாழ்த்துகள்.
  (வேதாவின் வலை

  பதிலளிநீக்கு
 11. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்...அய்யாவின் இந்த நூலுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் பரிசு பெற்ற செய்தியை கேட்ட மகிழ்வில்...இப்போது..

  பதிலளிநீக்கு
 12. திருப்பூர் தமிழ்ச் சங்க விருது கிடைத்தமைக்கு மிகவும் சந்தோசம் ஐயா... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு