வெள்ளி, 29 ஜனவரி, 2016

நாணயம் போற்றுவோம்.

தமிழன் என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்ள எத்தனையோ உண்மைகள் உள்ளன.தமிழின் மரபு,சிந்துசமவெளியைக்
காட்டிலும் முந்தைய நாகரீகம்.

பண்பாடு,மொழிவளம்,இலக்கியங்கள் எனப்பல இருந்தாலும்,  எல்லையில்லாமல் பரந்துபட்ட அவன் காலடித்தடங்களின் சாட்சியாக இன்னும் கிடைப்பது அவன் நாணயங்களேயாகும்.

பண்டமாற்று தாண்டி ஒரு பொதுப்பணத்தை உருவாக்கும் போது அதற்கு "நாணயம்" எனப்பெயர் வைத்ததே போதும் தமிழனின் தலைசிறந்த வாழ்வின் சாட்சிக்கு.

சங்ககால வரலாறுகளே இலக்கியங்களின் அதீத கற்பனை என்ற கூற்றும் இங்கே நெடுநாள் இருந்தது.

அந்த அறிவுமிக்கோர் சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் பெயர்கூட கற்பனையாக இருக்கலாம் என்றே பிதற்றிக்கொண்டிருந்தனர்.

ஆனால் மிகச்சமீபத்தில் தினமலர் திரு.இரா.கிருஸ்ணமூர்த்தி அவர்கள் "பெருவழுதி " எனப்பெயரிடப்பட்ட நாணயத்தை எடுத்து இயம்பியதன் மூலம் இரட்டைச்சாதனைகள் செய்திருக்கிறார்.

பழந்தமிழர் வாழ்வொன்றும் கற்பனைகளின் கூடாரமல்ல,தமிழின் ஆதிப்பெருமைகளில் எந்த மொழிக்கும் இல்லாத "ழு" உம் ஒன்றென.

பண்டைத்தமிழன் ரோமாபுரியிலும் காலூன்றி இருந்த வரலாறு தோண்டியெடுக்கப்படும் நாணயங்கள் பறைசாற்றுகின்றன.

புதுக்கோட்டையின் புகழ்க்கொடிகளில் ஒன்று அதன் "அம்மன்" காசுமாகும்.
பொதுவாய் நாணயங்கள் என்பது பரிமாற்றம் என்பதற்கு மட்டுமல்ல.
நாணயங்களின் பரிணாமம் என்பது ஒரு தேசத்தின் ,மொழியின், சமூகத்தின் வரலாற்றையும் சுமந்தே வந்திருக்கிறது.

நாணயங்கள் சேகரிக்கும் ஒவ்வொருவரும் ஒரு வரலாற்றுக்கடமையை செய்கின்றனர்.

நாணயங்கள் மருவி பணத்தாள்கள் ஆனாலும் வரலாற்றை வரைந்துகொண்டிருக்கும் பணியை துறந்துவிடவில்லை அவைகள்.

பணத்தாள்களின் ஒவ்வொரு வண்ணமும் ஒரு கதை சொல்லும்.

ஒரு மொழியின் வளர்ச்சியும்,கீழ்நோக்கி இறங்கும் அவலத்தையும் கூடச்சொல்லும்.

சுதந்திர இந்தியாவின் பணத்தாள்களில் பத்துக்குள் இருந்த தமிழ், பதின்மூன்றாம் இடத்தில் வந்ததை இதன் உதாரணமாய்ச் சொல்லலாம்.
உற்றுப்பார்த்தால் இது போன்ற பல உண்மைகள் இருக்கும்.

ஓட்டைக்காசுகள் தொடங்கி பிளாஸ்டிக் தாள்களில் பயணிக்கத்தொடங்கியிருக்கிறது நாணயத்தின் பயணம்..

உலகின் ஒவ்வொரு தேசத்தின் பணத்தாள்களும் அந்தந்த நாட்டின் வரலாற்றையும்,வளத்தையும்,போராட்டங்களையும் சொல்லாமல் சொல்பவை.

நாணயங்களை ஒவ்வொரு நாடும் எந்த பெயர்களில் அழைக்கின்றன?
அதன் மதிப்பு முன்பு எப்படியிருந்தது?
இன்றைய மதிப்பு என்ன?
உலகின் எந்த நாடுகள் பணத்தை "ரூபாய்" என்று அழைக்கின்றன?
ரூபாய் என்பதன் பாரம்பரியம் என்ன?

ரூபாய் என்றழைக்கப்படும் நாடுகளில் எல்லாம் தமிழனின் ஆட்சி நடைபெற்றதாய் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இன்றைய ஜப்பானின் நாணயத்தின் பெயர் "யென்".. அது ஆதியில் ரூபாய் என்றிருந்திருக்கிறது.

தமிழ் எழுத்துக்களை மட்டுமல்ல,தமிழ் எண்களை நாணயங்களில் பயன்படுத்தும் தேசங்களும் உண்டு இன்னும்.

இந்தோனேசிய பணத்தாள்களில் பிள்ளையார் உட்கார்ந்திருக்கிறார்.

நாணயங்களும்,பணத்தாள்களும் வரலாறு சொல்கிறதென்றால் ,
அஞ்சல் தலைகள் அன்றாட மாற்றத்தை அறிவிக்கின்றன.

வரலாறு மறந்தவர்களாய்த்தான் நாம் அவசர உலகில் மாறிப்போனோம்.

நமக்குள்ள பாரம்பரியம் உலகில் யாருக்கும் கிடைக்காத பெரும்பேறு நம்மிடம் உள்ளது.
இதைக்கட்டிக்காப்பது ஒருபுறம் என்றால்,
அறிந்து கொள்வதே முதல அவசியம்.

இனி உங்கள் கரங்களில் புழங்கும் நாணயங்களை,
பணத்தாள்களை வெறும் எண்களாய் பார்க்காமல் ,வரலாறாய் உணருங்கள்.31.01.2016 ல் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் புதுக்கோட்டை நாணயவியல் கழகம் சார்பில் காலை 10 மணி முதல் 5 மணி வரை 175 நாடுகளின் நாணயம்,பணத்தாள்கள்,மற்றும் அஞ்சல் தலை கண்காட்சி நடைபெறுகிறது...
வாய்ப்பிருப்போர் வந்து
ஒருநாள் வரலாற்றோடு வாழ்ந்துவிட்டுப்போகலாம்.

12 கருத்துகள்:

 1. அரிய,அறிய வேண்டிய பதிவு!
  சுவிஸ் ரூ புதுக்கோட்டைக்கு நான்கு விமான டிக்கட் அனுப்பினால் நாங்களும் வருவோம்ல!

  பதிலளிநீக்கு
 2. விழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்...

  அட...! தளம் தமிழ்மணத்தில் இணைந்து விட்டதே...! உங்களின் வாக்கையும் பதிவு செய்யவும்...

  பதிலளிநீக்கு
 3. நாணயத்தை பற்றி நயமான ஒரு பதிவு. நாணயம் ஒரு வரலாறு தான். என் மனதில் இன்றும் பதிந்து இருக்கும் ஒரு நாணயம், வெங்களத்தில் வந்த 20 பைசா. 25 பைசாவை விட பெரிதாக இருக்கும் . சிறிய வயதில் அது கிடைத்தால் என் உண்டியாய்ளுக்கு போய்விடும். இப்போது அது இருகின்றதா?

  பதிலளிநீக்கு
 4. தமிழ்மண இணைப்பைப் பெற்றதற்கு வாழ்த்துகளோடு ஒரு வாக்கும்!
  கடைசிவரியில் கூட கவிதையய்யா.. தொடர்க!

  பதிலளிநீக்கு
 5. விழா சிறக்கட்டும். வாழ்த்த்குஅல். சுவாரஸ்யமான விவரங்கள். தமிழ்மணத்தில் வாக்குப் பட்டை பெற்று விட்டீர்கள் போல!
  தம ​+1

  பதிலளிநீக்கு
 6. விழா சிறக்க எனது வாழ்த்துகளும்......

  வர நினைத்தாலும் அன்று வேறு ஒரு பயணம் முன் கூட்டியே முடிவு செய்து இருப்பதால் வர இயலாது.... அடுத்த முறை.....

  பதிலளிநீக்கு
 7. அருமையான பதிவு. நாணயங்கள் பற்றி பல தகவல்களை தெரிந்து கொண்டேன். நமது பாரம்பரியத்தை நமது வாரிசுகளுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டதில் நாம் திறமைசாலிகள். இனியாவது சந்ததிகளுக்கு தமிழின் பெருமையையும், பாரம்பரியத்தையும் கற்றுத் தருவோம்.
  த ம 6

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துகள் தமிழ்மண ஓட்டுப்பட்டையைப் பெற்றதற்கு.!! ஆம் நாணயங்கள் என்பன வரலாறு சொல்பவைதான். நாணயம் என்பது வர்த்தகத்திற்கு மட்டுமின்றி கதைகளையும் சொல்லுபவை தபால்தலைகளைப் போல...நாங்கள் நாணயங்கள் சேர்த்துவைத்திருந்தோம். தபால்தலைகளும் சேர்த்து வைத்திருந்தோம் வீட்டிற்கு வந்தவர்களிடம் காட்டி விளக்கியதும் உண்டு. எப்படியோ யாரோ சுட்டுக் கொண்டுப் போய்விட்டார்கள். மூன்று வருடங்களுக்கு முன்.

  நல்ல பதிவு..

  பதிலளிநீக்கு
 9. பழந்தமிழனின் பெருமையை உணராத சந்ததிகளை வளர்க்கிறோமோ என தோன்றுகிறது...சிறப்பான கட்டுரை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. உண்மை தான் ஐயா.இன்றை தலைமுறைக்கு நமது அடையாலம்,வரலாறு மற்றும் பெருமைப் பற்றி தெரிய இருந்த வாய்ப்புகள் அனைத்தும் அழிந்து வருகின்றன என்பது வருத்தமளிக்கிறது ஐயா.நான் வேறுப்பட்ட நாணங்களை சேமித்து வைத்துக்கொண்டு இருக்கிறேன்.

  நல்ல பதிவு நாம் தமிழர்கள் நாம் தான் அடுத்த தலைமுறைக்கு அடையாளத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும்.இல்லை என்றால் தமிழ் மற்றும் தமிழனின் பெருமைகளை தெரிந்துக் கொள்ளாமலே நகர்ந்துவிடும் அடுத்த தலைமுறையின் காலம் ஐயா.

  பதிலளிநீக்கு