திங்கள், 18 ஜனவரி, 2016

இப்பதான் காதலிக்கிறேன்...

துளைகளை
மூடி
உறையிட்டிருக்கின்றாள்
கச்சேரி
முடிந்ததென.

ஊசி
இடைவெளியில்
காற்றுரச
தீப்பிடிக்கும்
தேவகானம்.

எத்தனை
எழுதி
என்ன..
சிறு
புன்னகையில்
தோற்கடிப்பாள்..

எத்தனையோ
சொல்லுகின்றேன்.
பித்தனென்று
ஒதுங்குகிறாள்.

ஊர்க்குருவி
நான்
என்பாள்..
என்
மனச்சிறகின்
வேகம்
அறியாதாள்.

சுமந்து
திரிகிறேன்
தலைமீது..

விலையில்லா
என் காதல்.

சிலைபோலக்
கல்லானாள்.
மண்ணானேன்.

என்
வார்த்தை
வங்கிக்கு
ஞாயிறும்
விடுப்பு இல்லை..

சேர்த்த கவி
சொல்லியழ
வேறு எங்கும்
கிளைகள்
இல்லை.

தொடர்பு
எல்லைக்குள்
தொடர்பின்றி
மறைகிறாள்.

வருவாள்
ஒரு
நாளிலென
கவிதைகள்
கருத்தரித்திருக்கிறேன்

கல்லாய்
சமைந்திருக்கிறேன்.
அந்தப்
பொல்லாத
பேரழகி
கால்
வைக்கவேண்டாம்

ஒரு
ஹாய்
சொன்னால்
போதும்.


8 கருத்துகள்:

 1. அட! செல்வா! யங்க்!!! காதலுக்கு வயது உண்டா என்ன..அஹஹஹ் இவ்வளவு அழகாக எழுதியிருக்கும் போது இன்னுமா ஹாய் சொல்லலை?!!

  படம் கூட அழகுதான்...

  பதிலளிநீக்கு
 2. ரசித்தேன், வார்த்தைகளில் விளையாடி இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 3. என்
  வார்த்தை
  வங்கிக்கு
  ஞாயிறும்
  விடுப்பு இல்லை..

  வார்த்தை விளையாட்டு என்பது இதுதானோ
  அருமை நண்பரே

  பதிலளிநீக்கு
 4. இத்தனை எழுதும் நான் ஒன்று சொல்வேன் சார் ஏன் அதிகம் எழுதுவதில்லை என கேட்க தோன்றுகின்றதே!

  ஆல்ப்ஸ் தென்றல் வந்தும் உங்கள் வரிகளை கடனாய் தந்ததுக்கு நன்றி சார்.

  இன்னும் எழுதுங்கள்!

  பதிலளிநீக்கு
 5. //என்
  வார்த்தை
  வங்கிக்கு
  ஞாயிறும்
  விடுப்பு இல்லை// என்னே! என்னே! ஆஹா!

  பதிலளிநீக்கு
 6. இதுவரை காதலிக்கவே இல்லையா சார்? தலைப்பில் கேள்வியை தொங்கவிடும் திறமைக்கு சல்யூட்.

  இதை படித்ததும் ஹாய் கிடைத்ததா இல்லை.

  பதிலளிநீக்கு