புதன், 16 டிசம்பர், 2015

அப்பனின் சாபம்...

பெருமழை தீர்ந்த
பின்னிரவொன்றின்
மீதியில்

அறுந்து
கிடைத்த
இணைப்பில்

அலறுகிறாள்
சின்னவள்.

வாழும் சவமாய்
வார்த்தைகள்
கேட்கிறேன்

ஒருநாள் முழுதும்
உணவில்லை
என்கிறாள்..

எதை
அறுத்து வீச...

எரிந்து
சாம்பலாக
எல்லாம்.

14 கருத்துகள்:

 1. நியாயமான கோபம்தான். கையறுநிலைதான். ஆனால் இந்தக் கோபங்களையெல்லாம் திரட்டியல்லவா பெருநெருப்பை உண்டு பண்ண வேண்டியிருக்கிறது செல்வா? அழித்தது எது? இனி இந்த அழிவே இல்லாத புதிய உலகத்தை ஆக்குவது எப்படி? என்றே உங்கள் எரிக்கும் சிந்தனையை மடைமாற்ற வேண்டுகிறேன். (சொல்வது எளிது, செய்வது அரிதுதான்..செயற்கரிய செய்ய ஞானவெள்ளம் பொங்கட்டும்)

  பதிலளிநீக்கு
 2. வர வரப் படங்களையும் பொருத்தமாகத் தேடி எடுத்துப் போடுகிறீர்கள் அருமை செல்வா.. படங்களை முன்னாலேயே போட்டால் அந்தப் படங்கள் நம் சொற்களுக்கு வண்ணம் தீட்டும்.

  பதிலளிநீக்கு
 3. வேதனையான உண்மையான வரிகள் நண்பரே...

  பதிலளிநீக்கு
 4. பேராசை மனங்களை அறுப்போம்
  அறியாமைத் திரையினை அறுப்போம்
  மனிதனின் ஆணவத்தை அறுப்போம்
  தனிமனிதப் பொறுப்பின்மையைஅறுப்போம்
  தீவினையெல்லாம் அறுப்போம்
  நன்மைக்கு எதிரானவை
  அனைத்தும் அறுப்போம்

  பதிலளிநீக்கு
 5. 75 பதிவுகளில்... 5மாதம் முடிவதற்குள் 10,000 பார்வைகளைப் பெற்ற கவிஞர் மீரா.செல்வாவுக்கு சூடா ஒரு டீ போடுங்கப்பா..

  பதிலளிநீக்கு
 6. எத்தனைக் குடும்பங்கள் அன்று உணவில்லாமல்...ஒரு நாள் மட்டுமின்றி 3 நாட்கள் கூட இருந்திருக்கின்றார்கள் நிவாரணக் குழுவினர் வந்து தரும் வரையிலும் கூட....

  வேதனைதான்..ஆனால் இந்த வேதனையும் மனிதர்கள் நம்மால்/அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டது தானே...

  கீதா: நான் செல்லும் பேருந்து, ரயில் பயணங்களின் போதெல்லாம், மற்றும் தெருவில் செல்லும் போதெலாம் நான் சொல்லிவருவது தயவாய் குப்பைகளை இப்படிப் போடாதீர்கள் ஒரு பையில் போட்டு எங்கு குப்பைத் தொட்டியைக் காண்கின்றீர்களோ அங்கு போடுங்கள் என்று. ஆனால் சிரித்துக் கொண்டு என் கண்ணின் முன்னேயே ஜன்னல் வழி எரிகின்றார்கள். நண்பருக்கு அலைபேசினேன் "நண்பரே உங்கள் ஊரின் அருகேதான் வண்டி வந்து கொண்டிருக்கின்றது முடிந்தால் ஒரு வாளை எடுத்துவாருங்கள் என்று. பின்னர் கண்ணை மூடி அமைதியானேன். இது இப்போதல்ல செல்வா. என் சிறுவயதிலிருந்து ஏற்பட்டபழக்கம். சில வருடங்களாக பை ஒன்றைக் கொண்டு சென்று ரயிலின் பக்கவாட்டில் உள்ள பை மாட்டும் கொக்கியில் மாட்டிவைத்து தயவாய் இதில் போடுங்கள் குப்பைகளை. நான் அகற்றிக் கொள்கின்றேன் என்று. கீழே அவர்கள் தரையில் எறியும் குப்பைகளையும் எடுத்து அந்தப் பையில் போடத் தொடங்கினேன். 10ல் 2 பேர் தான் கொஞ்சம் உறுத்துவதாக எண்ணித் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். மற்றவர்கள்? முதலில் போடாமல் அடுத்து அவர்களை அறியாமல் கை ஜன்னலுக்கு வெளியே நீண்டுவிடுகின்றது. தொட்டில் பழக்கம்..வேதனை

  பதிலளிநீக்கு