புதன், 9 டிசம்பர், 2015

தொடர்பு எல்லைக்குள்..தொலைந்து போனவர்கள்...

அன்பின் சக்திக்கு,
அனுபங்களை உனக்கு எழுத ஆரம்பித்ததிலிருந்து,சந்திக்கும் எல்லாமே நீயும் நானும் சிந்திக்க வேண்டியவைகளாகவே நடந்துகொண்டிருக்கிறது.

பெருமழை தந்த விளைவுகளில் தலையாயதாய் நம்மை பாதித்தது தகவல் தொடர்பே.
நம் முன்னோர்கள் இறைவழிபாட்டிலும் சமூக அக்கறை கொண்டார்கள்.ஆலயக்கும்பங்களில் தானியங்கள் வைத்தனர்.வீட்டுக்கோலங்களிலும் எறும்புகளுக்கு இரை வைத்தனர்.

ரமணன்கள் பிறக்காத காலங்களில் வெட்டப்பட்ட கால்வாய்கள்,கட்டப்பட்ட அணைகள் யாவும் இடர்காலங்களைத்தாண்டி வலிமை கொண்டிருந்தன..
கல்லணை போதுமே காணும் சாட்சியாய்.

வளர்ந்துவிட்ட அறிவியல் யுகத்தில் எத்தனை மாற்றங்கள் கண்டுவிட்டோம்.சாதாரண காலங்களில் அறிவியலின் அத்தனை சுகங்களையும் அனுபவித்துப் பழகிவிட்டோம்.

கிலுகிலுப்பை பிடித்து விளையாடி ஒலிகளின் வகைகள் அறியவேண்டிய குழந்தைகளின் கைகளில் கைபேசி கொடுத்து பழகிவிட்டோம்.

நீளும் பட்டியல் நிறுத்தி விஷயத்திற்கு வருகிறேன்..
      
தகவல் தொடர்பு என்பது இன்றைய யுகத்தில் தவிர்க்கப்பட முடியாதது.
   
பல்லாண்டுகள் நடந்த ஆட்சியை மாற்றும் அளவிற்கு வலிமையும்,ஊழலும் நிறைந்த துறையாக இருக்கும் துறை.
 
ஊழல் என்பது ஊறிப்போன நாட்டில் எப்படியும் தொலைந்து போகட்டும்.

ஊழிகாலங்களில் தகவல்தொடர்பு முறிந்து மாயம் என்ன?

பரதேசிகள்.....

மட்டைப்பந்து விளையாட்டுக்கு மாற்றுவீரர்கள் வைத்திருக்கிறார்கள்.
நாசமாய்ப்போன அரசியலில் மாற்று வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.

அத்தியாவசியமாய் மாறிப்போன தகவல் தொடர்பிற்கு ஏனில்லாமல் போனது மாற்று ஏற்பாடு?

சக்தி,
  வந்தது. நிலநடுக்கமோ,சுனாமியோ அல்ல..
மழை..மழை..மழை மட்டுமே...அளவில் கொஞ்சம் கூடுதலாய்..

∆இலவச பேசும் நேரம்
∆இலவச காலர் டியூன்கள்
∆அவளிடம் பேசுங்கள்...

இன்னும் இன்னும்...

வாழும் காலங்களில் வலைவிரித்து காசு புடுங்கிவிட்டு.
சிரமப்படும் காலங்களில் எங்கே தொலைந்தீர்கள்..

உடல்களை விற்று வயிறு வளர்க்கும் எங்கள் பெண்கள் பட்டினி கிடந்து பணம் அனுப்பி இருக்கிறார்களே...
அவர்களினும் நீங்கள் கீழோர்.

நாம் பேசிய காசுகளில் வயிறு வளர்த்து,உயிர் போன காலங்களில் ஒளிந்து கொண்டவர்கள்...

இனி வேறு வேலை செய்து பிழைக்கட்டும்.

ஆயிரம் தொழில் நுட்ப காரணங்கள் அவர்கள் சொல்லலாம்.

ஏற்க முடியாது எதுவும்.

இந்த நாட்களில் தகவல் தொடர்பின்றி எத்தனை சாவுகள் நடந்திருக்கும்..
உறவுகளிடம் உள்ளது சொல்லாமல் எத்தனை மன வேதனைகள்..

இதற்கெல்லாம் என்ன விலை.?

மேலும் சக்தி...
இந்திய நாட்டின் எல்லைப்புறங்களிலும் இப்படித்தான் இருக்கும் இவர்களின் சேவையெனில் ...? சிந்திக்கவும் முடியவில்லை.

எளிதில் கடந்துவிட முடியாது இந்த பிழைகளை...
அரசும்,ஆர்வலர்களும் சிந்திக்க வேண்டும்.

சக்தி,
உனக்கு என் எண்ணங்களைச்சொல்கிகின்றேன்.

இப்படியே நாம் இருந்தோமானால் ...
இந்த பதிவை பத்திரப்படுத்தி வை.
உன் காலங்களில் உன் பிள்ளைகளுக்கும் அனுப்ப வேண்டியிருக்கும்..

அன்புடன்,
செல்வக்குமார்.

11 கருத்துகள்:

 1. வணக்கம் நண்பரே !

  உள்ளக் கிடக்கைகைகளை ஒட்டுமொத்தமாய்க் கொட்டி விட்டீர்கள் உண்மைதான் எம்மால் வி ஐ பி ஆனவர்கள் எல்லாம் எமக்கொரு துன்பம் வரும்போது தொலைந்துதான் போனார்கள் அகக்கண்ணையும் மூடிவிட்டு ,, காலம் இவர்களைத் தண்டிக்கட்டும் !

  அருமை தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. அருமையாகச் சொல்லிவிட்டீர்கள் பெரியவளுக்குச் சொன்னது போல் சொல்லி...வேதனைதான்.

  பதிலளிநீக்கு
 3. இப்படியே நாம் இருந்தோமானால் ...
  இந்த பதிவை பத்திரப்படுத்தி வை.
  உன் காலங்களில் உன் பிள்ளைகளுக்கும் அனுப்ப வேண்டியிருக்கும்..

  உண்மை நண்பரே
  உண்மை

  பதிலளிநீக்கு
 4. //பரதேசிகள்.....

  மட்டைப்பந்து விளையாட்டுக்கு மாற்றுவீரர்கள் வைத்திருக்கிறார்கள்.
  நாசமாய்ப்போன அரசியலில் மாற்று வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.//

  சிந்திக்க வைத்த பதிவு.

  பதிலளிநீக்கு
 5. வாழும் காலங்களில் வலைவிரித்து காசு புடுங்கிவிட்டு.
  சிரமப்படும் காலங்களில் எங்கே தொலைந்தீர்கள்..
  தொடர்பு எல்லைக்கு அப்பால் போனது யார்யார் என்று பட்டியல் வந்ததே பார்ககலயா செல்வா?

  பதிலளிநீக்கு
 6. நல்ல கட்டுரை. மிகவும் தேவையான நேரத்தில் பயன்படாத சேவை... எத்தனை கொடுமை.

  பதிலளிநீக்கு
 7. தொடர்பு எல்லைக்குள்..இரப்பவர்களையே தொடர்பு கொள்ள முடியாத போது......அப்பால் இருப்பவர்கள் எப்படி,,,,,???

  பதிலளிநீக்கு
 8. தொடர்பு எல்லைக்குள்..இரப்பவர்களையே தொடர்பு கொள்ள முடியாத போது......அப்பால் இருப்பவர்கள் எப்படி,,,,,???

  பதிலளிநீக்கு