சனி, 24 செப்டம்பர், 2016

நீளும் விரல்கள்...

முத்தம்மா அத்தைக்கு
எத்தனை பிள்ளை
பிறந்ததுன்னு
தெரியாது யாருக்கும்.தங்குனது
ஆண்,பெண்ணென
ரெண்டும் ரெண்டும்
நாலு.

கோயில் திருவிழாவில்
அத்தை கஞ்சி
காய்ச்சி ஊற்றும்.

கொள்ளும்,
பயறுகளும்
மிதக்கும் கஞ்சியில்...

ஒழுகும் வாய்துடைத்து
வீட்டுக்கும்
அனுப்பிவைக்கும் மனசு.

புற்றுவந்து
வலிமறக்க
சாராயம் குடித்து
கத்திய
அத்தையின் மரணம்
ரொம்பநாள்
அந்த வீதிகடக்கையில் கேட்டுக்கொண்டே
இருந்தது.

ஆளோடிப்பறவைகளாய்
ஆளுக்கு ஒரு திசை
பறந்த பிள்ளைகள்,
திருவிழாவிற்கு
கூடி
கஞ்சி ஊற்றுகிறார்கள்..
பிளாஸ்டிக் கப்புகளில்..

துடைச்சுக்கடா
மருமகனேன்னு
அத்தை
பிளக்ஸில்
சிரிக்கிறார்...
10 கருத்துகள்:

 1. Meera.Selvakumar ayya, andha athaiyai flex yavadhu parka romba avalay ulladhu. Athaiku than enna pasam!! Azhagaay tharam pirithu kal, kurunai neekap patta ponni arisiyai pakkuvamaay ooravaithu kaaychappatta kanjiyaay suvaikiradhu ungal athai kavidhai!! Ninaithale suvaipadhal ennaiyum solgiraar ungal athai'vaayai thudaichukada' endru.

  பதிலளிநீக்கு
 2. அத்தையின் வெள்ளந்தி மனசு தெரியும் கவிதை அண்ணா...

  பதிலளிநீக்கு
 3. அருமை... என் அத்தைப்பாட்டியை நினைவுபடுத்திய பகிர்வு.

  பதிலளிநீக்கு
 4. பழய ஞாபகங்கள் கரைந்துபோகும் எச்சமாய்
  சில அடியில் தேங்குமே அதுவா

  பதிலளிநீக்கு
 5. எங்களுக்கு அன்பு காட்டிய ஓர் நல்லியத்தை இந்த பதிவு நினைவூட்டியது. சில நேரங்களில் கனவுகளிலும், கற்பனைகளிலும் கடந்த காலத்தை நினைத்து வாழ்க்கையினை ஓட்டவேண்டியுள்ளது என்பது வேதனையே.

  பதிலளிநீக்கு