வெள்ளி, 13 ஜனவரி, 2017

விசில் பொங்கல்..

ஆராயிப் பாட்டி
ஆவாரம்பூ
கட்டொன்று
ஐந்துரூபாயென
விற்றுக்கொண்டிருந்தார்..



இரண்டு முடிச்சோடு
மாவிலை சேர்த்து
முடிகிறார்.

மருமகள்
மஞ்சள் கொத்து
விற்கிறாள்
வாங்கிப்போ
ராசா என்றாள்.

வழக்கமாய்
பொதுக்கூட்டத்துக்கு
ஆளிறக்கும்
திலகர்திடல்
டிராக்டரில்
கரும்பு இறங்கியிருக்கிறது..

ஆதிகாலக்கடைச்
சாலையில்
ஆரவாரமாய்க்கடக்கிறது
கட்டைப்பைகள்.

புள்ளிக்கோலங்கள்
மறந்த
ஜல்லடைக்கண்கள்
வரைந்து சிரிக்கும்
சாலை..

வேட்டியோ
ஜட்டியோ
செல் வைக்க
வசதி வேண்டும்
ஒரு
கட்டிக்கோ
ஒட்டிக்கோ..

குறுஞ்செய்தியில்
காத்திருக்கிறது
நாலைந்து  
ஹேப்பி பொங்கல்.

ஜல்லிக்கட்டு
சேதிகளில்
தப்பித்து
வீடு வருகிறேன்..

விடுமுறை
இன்னொருநாள்
என்பதால்
ஒருநாள்
முன்னரே வந்துவிட்டது
விழாக்காலக்
கொண்டாட்டம்
பிள்ளைகளுக்கு.

அவள்
யாரிடமோ
கேட்டுக்கொண்டிருக்கிறாள்..

குக்கர் பொங்கலுக்கு
எத்தனை விசில்..?


9 கருத்துகள்:

  1. அப்படிக் கேளுங்க...! ஹா... ஹா...

    இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. உங்க வீட்டில் குக்கர் பொங்கல் என இப்படி சட்னு ஒப்புக்கொண்டு விட்டீர்களே?

    பதிலளிநீக்கு
  3. அருமை!!! பொங்கலோ பொங்கல் எல்லாம் அந்த விசிலே சொல்லிடும்....!!

    கீதா

    இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. அருமை அண்ணா...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. குக்கர் பொங்கல்! - :)))) பல வீடுகளின் நிலை இது தான்....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  7. நான்கு கால் செல்வங்களுக்கு
    நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
    பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
    பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
    தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு