சனி, 31 அக்டோபர், 2015

ரோஜாச்செடியில் முள்ளிருக்கும்

காங்ரீட் வயலில்
பிளாஸ்டிக்
தொட்டிகளில்
நட்டிடுக்கிறாள்..

அந்திமந்தாரை,
அரளி,
வாடாமல்லி
என
பல செடிகளை...

அடைமழை நாட்களிலும் குளிப்பாட்டுகிறாள்.

கன்னங்களில்
கரங்கள் வைத்து
நீண்ட நேரம்
மவுன உரை ஆற்றுகிறாள்..

சின்னவளுக்கு
என்மேல்
கோபமிருக்கக்கூடும்

முட்கள் நிறைந்த
ஒரு ரோஜாச்செடியை
பிடுங்கி
எறிந்ததற்காக......

3 கருத்துகள்:

  1. நிச்சயமாக கோபம்இருக்கத்தான் செய்யும்
    தாங்கள் முட்களை மட்டும்தானே
    பிடுங்கி எறிந்திருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. சின்னவளின் கோபம் நியாயமானதுதானே..அருமையான வரிகள்!

    கீதா : ஒன்று தெரிந்திருக்கும் உங்களுக்கு....கணினியிலேயே, தோட்டம் வளர்க்கலாம், நாலுகால் செல்லங்கள் வளர்க்கலாம், மிருகக் காட்சிச்சாலை வைக்கலாம்...உணவளித்து இவற்றை எல்லாம் நன்றாகப் பார்த்துக் கொண்டால் உங்களுக்கு போனஸ் கிடைக்கும்....

    எதிர்காலத்தில் ஆப்பிள் என்றால் இதுதான் என்று கணினியில் பார்க்க நேரிடும் அபாயம் வருகின்றது என்று ஸோ கால்ட் அமெரிக்காவே சொல்லி வருகின்றது...

    பதிலளிநீக்கு