செவ்வாய், 17 நவம்பர், 2015

பேசக்கூடாது......

அன்பின் சக்திக்கு,
விளையாட்டாய் ஒருநாள் உன்னிடம் சொன்ன நினைவு
ஒரு செல் உயிரினம் ஒன்று கூறென்றால் தைரியமாக மனிதனைச் சொல்லலாமென.

இந்த அலைபேசிதான் மனிதனை என்ன பாடுபடுத்துகிறது....

நேற்றைய ஒரு கட்டுரை படித்தபின் அலைபேசி தொடுவதற்கும் பயமாய் இருக்கிறது.

வீட்டின் மின் அடுப்பில் ஒரு லிட்டர் நீரை ஒரு டிகிரி சூடு பண்ண 500 வினாடிகளாகுமாம்.அதற்கு ஈடாய் அலைபேசியின் கதிர்வீச்சு இருக்குமாம்.

1956ல் எஸ்.ஆர்.ஏ. எனும் ஸ்வீடன் தயாரித்த அலைபேசியின் வாடிக்கையாளர்கள் 125 பேர்களாம்.1983,1989 இல் மோட்டராலா,1994 ல் நோக்கியா ,2002இல் பிளாக்பெர்ரி,2002இல் ஆப்பிள் என விரிந்த அலைபேசிகளின் வரிசை பிரமாண்டமாய் இருக்கிறது.

அலைபேசிகளின் வரலாறு சொல்வதல்ல என் நோக்கம்.

மனிதனின் ஓர் உறுப்பென மாறிவிட்ட ஒரு சாதனம் எத்தனை ஆபத்துகளை தனக்குள் ஒளித்துக்கொண்டிருக்கிறது என்பதை யாவரும்,நாம் உட்பட அறிந்து கொண்டோமா என்பது தான் புரியவில்லை.

மேல்சட்டைப் பைகளில் அலைபேசி வைத்துக்கொள்வது...இதய நோயை விலைகொடுத்து வாங்குவதற்கு சற்றும் குறைவில்லையாம்.

சரியான அலைவரிசை இல்லாமலும்,அலைபேசியில் சார்ஜ் மிகக்குறைவாக இருக்கும் போது நீ பேசுவது ..யாருடன் என்றாலும் ...உன் உடல்நலம் கெடுக்கும் கதிவீச்சுகள் சூழத்தான்.

பேச்சினைக்குறைக்க வேண்டும் சக்தி.
அவசியமானால் பேசு.
குறுஞ்செய்தி போதும்.
அது ஆண்டவனே என்றாலும் 20 நிமிடங்களுக்கு மேலெனில் அமர்த்திவிடு.
இரவுகளில் அலைபேசியை தூரப்போடு. விளையாட்டு ஏதேனுமிருந்தால் அழித்தெறி.

20 முதல் 60 சதவீத மூளை சம்மந்தப்பட்ட நோய்களின் மூலகாரணம் அலைபேசியாம்.

பார்த்தாயா, சிட்டுக்குருவிகளுக்காக பரிதாபப்படுகிறோம்..நமக்கான சவக்குழிகளைக் கண்டுகொள்ளாமல்.

முக்கியமாய் காதலர்களுக்கு சொல்லவேண்டும் சக்தி..

இனி காதல் சொல்ல கடிதங்களே கட்டாயம் என்று..
எத்தனை நன்மைகள் விளையும் பார்,,
ரீசார்ஜ் தொல்லை இருக்காது.
காதல் கைகூடாவிட்டாலும்
கையெழுத்து கொஞ்சம் அழகாகலாம்.

உன் வெற்றிக்கென ஒரு அலைபேசி கேட்டிருந்தாய்.
கண்டிப்பாய் வாங்கித்தர மாட்டேன்.காசும்,நீ பேசுவதும் பொருட்டல்ல...

நீ என் ஜீவன்...

அன்புடன்.
செல்வக்குமார்.

21 கருத்துகள்:

 1. உன் வெற்றிக்கென ஒரு அலைபேசி கேட்டிருந்தாய்.
  கண்டிப்பாய் வாங்கித்தர மாட்டேன்.காசும்,நீ பேசுவதும் பொருட்டல்ல...

  நீ என் ஜீவன்...

  எத்துனை ஜுவனுள்ள வார்த்தைகள்

  பதிலளிநீக்கு
 2. எதுவும் பொருட்டல்ல
  நீ என் ஜீவன்!!!
  இந்த ஒற்றைவார்த்தையிலல்லவா உம் உலகமே சுழல்கிறதிங்கே....

  பதிலளிநீக்கு
 3. அதற்காக...? இன்னொரு பக்க நியாயத்தையே பார்க்காமல் ஒருபக்க அநியாயத்தை மட்டும் சொல்வது சரியா செல்வா? அறிவியல் சாதனங்கள் எல்லாவற்றிலுமே இப்படி இரண்டுபக்கமும் இருக்கத்தான் செய்கிறது. பயன்படுத்தத் தெரிந்து கொள்ளவும் பழக்கப்படுத்தணும் இல்லயா? அதையும் சேர்த்து இன்னொரு பதிவு எழுதுங்களேன்.. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எத்தனை சாதகங்கள் இருந்தாலும்...பயமாஇத்தானிருக்கிறது அய்யா....நீங்கள் தொடங்கிவைத்த வலைப்பூ விரிகிறது...

   நீக்கு
 4. பல தீமைகள் இருக்கிறது என்றாலும் சில நன்மைகள் உண்டு. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  நல்ல பகிர்வு நண்பரே. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருகுடம் பால்தான்....ஒரு சொட்டு பயமுறுத்துகிறதே?
   என்ன செய்ய ?

   நீக்கு
 5. அளவோடு பயன்படுத்தினால் எல்லா கண்டுபிடிப்புகளுமே நன்மை பயக்கும். என்பதை உணர்ந்தால் போதும்.

  //முக்கியமாய் காதலர்களுக்கு சொல்லவேண்டும் சக்தி..// ஐயோ பாவம் க! அழகன் படத்துல வர மாதிரி பழைய தொலைபேசியையாவது அனுமதிக்கலாமேஹஹஹஹ்

  பதிலளிநீக்கு
 6. இனி காதல் சொல்ல கடிதங்களே கட்டாயம் என்று..
  எத்தனை நன்மைகள் விளையும் பார்,,
  ரீசார்ஜ் தொல்லை இருக்காது.
  காதல் கைகூடாவிட்டாலும்
  கையெழுத்து கொஞ்சம் அழகாகலாம்.-- அழியாத-நிணைவுக்காகவும் இருக்கலாம்...

  பதிலளிநீக்கு
 7. இனி காதல் சொல்ல கடிதங்களே கட்டாயம் என்று..
  எத்தனை நன்மைகள் விளையும் பார்,,
  ரீசார்ஜ் தொல்லை இருக்காது.
  காதல் கைகூடாவிட்டாலும்
  கையெழுத்து கொஞ்சம் அழகாகலாம்.-- அழியாத-நிணைவுக்காகவும் இருக்கலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை அய்யா...கடிதங்கள் தரும் சுகம்...கலரில் வரும் கண்ணாடித்திரைகள் தருவதில்லை தானே?

   நீக்கு
 8. கைபேசியும் காலணி போல
  வெளியிலேயே விட்டுவிட்டால்
  குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

  நல்ல பதிவு சகா.

  பதிலளிநீக்கு
 9. அருமை சகோதரா.
  மிக்க நன்றி
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 10. சகோதரா.
  நான் ஒன்று சொன்னால் நம்புவீர்களா?
  என்னிடம் கைத் தொலை பேசி இல்லை
  நான் பாவிப்பதும் இல்லை.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமை அம்மா...நாங்களும் தொலைகாட்சி இல்லாத வீடு தான்....சீக்கிரமே கைபேசி ஒழிக்கவேண்டும்..

   நீக்கு
 11. பார்த்தாயா, சிட்டுக்குருவிகளுக்காக பரிதாபப்படுகிறோம்..நமக்கான சவக்குழிகளைக் கண்டுகொள்ளாமல்.

  நிஜம் தான். வாங்கிக்கொடுத்து விட்டு விழி பிதுங்க்கொண்டிருக்கின்றோம்.

  பதிலளிநீக்கு