திங்கள், 23 நவம்பர், 2015

மழையே வா!!!

சின்னவளை
பார்க்க
அதிகாலையில்
வந்துவிட்டேன்.

தூங்கிக்
கொண்டிருக்கிறாள்.

புத்தகங்கள்
சிதறிக்கிடக்கிறது
படுக்கையில்.

பக்கத்தில்
அமர்ந்து
மெல்ல
எழுப்புகிறேன்.

முணங்கித்
திரும்பிப்
படுக்கிறாள்.

நிறைய கதைகள்
இருக்கிறது
பேச..

மழையே..
இன்றும் வா.

7 கருத்துகள்:

 1. மழைபேசும் கவிதைகளை தோற்கடித்துவிடுகிறது மகளின் உறங்கியபடியே முகம் சிரிக்கும் புன்னகை!

  பதிலளிநீக்கு
 2. கவிதைகளை கண்டால் காத தூரம் ஒடும் எனக்கு உங்களின் கவிதை மகிழ்வை தருகிறது.. படித்து மகிழ்ந்தது மனதிற்குள் ஒரு இனம் புரியாத சந்தோஷம் ஏற்படுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழா அந்த அழகியல்தான் அவருக்கு முதற் பரிசைப் பெற்றுத் தந்தது! நாங்கள் அதை மிகவும் ரசித்துப் படித்தோம் பல முறை...இப்போதும் ....இதோ இங்கு வரும் கவிதைகளை..

   நீக்கு
 3. பள்ளிக்கு விடுமுறை விடச்சொல்வோம்
  அருமை நண்பரே

  பதிலளிநீக்கு
 4. சின்னவளோடு பேசிய கதைகள் கவிதைகளாக வந்துவிடுமே....ரசித்தோம்

  பதிலளிநீக்கு
 5. தொடர்ந்து பேசுங்கள்.... தொடரட்டும் கவிதைகள்.

  பதிலளிநீக்கு