திங்கள், 30 நவம்பர், 2015

சீப்பில் சிக்கிய வரிகள்...

அவள்
அன்னை
இல்லா
ஓர்
நாளில்
பின்னச்சொன்னாள்
என்னை.

எண்ணெய் தடவி
இழைகளாய் பிரித்து
சீப்புக்கும் வலிக்காமல்
சீவி..
ரிப்பனில்
ஓர்
பூ
முடித்து..

சின்னவள்
சிரித்தாள்.

நான் சீப்பில்
சிக்கிய
முடிகள் பொறுக்கியும்

ஒரு
கவிதை
நெய்திருந்தேன்.

18 கருத்துகள்:

 1. தந்தைகள் பெண் குழந்தைக்கு பின்னலிடும் போது அன்பையும் சேர்த்து பின்னிவிடுகிறார்கள்

  இப்படிக்கு
  அன்பான தந்தை மதுரைத்தமிழன்

  பதிலளிநீக்கு
 2. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அழகான கவிதையாக வந்து இங்கு பிறக்கிறது உங்களின் அழகான குழந்தையை போல

  பதிலளிநீக்கு
 3. சின்னவளே உங்களுக்கு ஒரு கவிதைதான்..!

  பதிலளிநீக்கு
 4. சீப்பில்
  முடிதான் சிக்கும் என்று இதுநாள் வரை
  எண்ணியிருந்தேன்
  இப்பொழுதுதான் தெரிகிறது
  கவிதையும் கிடைக்கும் என்று

  பதிலளிநீக்கு
 5. செல்வா சீப்பில் சிக்கிய முடிகளால் நெய்யப்பட்ட கவிதை அருமை....ம்ம்ம் என்ன ஒரு அன்பான தந்தை!!!! கொடுத்துவைத்தவள் சின்னவள்! நீங்களும் கொடுத்துவைத்தவர் சின்னவளால்! இப்படிக் கவிதை மழை மொழிகின்றதே...அருமை

  பதிலளிநீக்கு
 6. ரசிக்கவைத்த கவிதை...அன்பில் நனைகையில் அத்தனையும் கவிதைதான்.

  பதிலளிநீக்கு