வெள்ளி, 6 நவம்பர், 2015

எப்படி சொல்ல...?

சவுக்குத்தோட்டத்தில்
சத்தமிட்டுப்
படித்ததையும்,
நாவல் பழத்துக்கு
உப்பிட்டு தின்றதையும்,
சூரைப்பழம்
தேடி
ஊர் தாண்டி
சென்றதையும்,

திருவிழா 

நிகழும் நாளில் 

விடியும் வரை 

விழித்ததையும்,
வாழ்க்கைக்காய்
அழுததையும்,
துரோகத்தால்
துவண்டதையும்,
துல்லியமாய்
சொல்லியிருக்கிறேன் சின்னவளுக்கு..

ஒருபோதும்
முடியவில்லை
அவள் மீது
நான் கொண்ட
பிரியம் சொல்ல...

9 கருத்துகள்:

 1. பிரியத்தை
  வார்த்தையில்
  அடக்கவும் கூடுமோ?
  அருமை நண்பரே நன்றி

  பதிலளிநீக்கு
 2. பிரியம் சொல்ல...வேண்டும் சகோதரா...

  பதிலளிநீக்கு
 3. பிரியம் சொல்ல...வேண்டும் சகோதரா...

  பதிலளிநீக்கு
 4. சொல்லனுமோ உங்கள் அன்பை....சொல்லாமலே ஒளிருமே..

  பதிலளிநீக்கு