புதன், 18 நவம்பர், 2015

சின்னவள் கணக்கு.....

சின்னவளுக்கும்
எனக்கும்
சிறு சண்டை மூண்டிருக்கிறது.


எப்போதோ
உடைத்துத் தந்த
உண்டியல் பணத்தை
திருப்பிக்கேட்கிறாள்.
பல நூறு மடங்கு
அதிகமாய் இருக்கிறது 
கணக்கு.
கால்கள் உதறி கதறுகிறாள்.
குளியலறைக்குள்
என்னை சிறை வைக்கிறாள்..
இதை அனுபவித்தே
ஆகவேண்டும்..
இந்த தேவதையின்
தீர்ப்புக்கு
அப்பீல் கிடையாது...


11 கருத்துகள்:

 1. தேவதைகள் திருப்பிக்கேட்கும் கடன்கள் இருந்தால் வாழ்நாள் முழுதும் பணக்கார தகப்பன் நீ

  பதிலளிநீக்கு
 2. தேவதையின்
  தீர்ப்புக்கு
  அப்பீல் கிடையாது...
  எனது வேட்பிரஸ் வழியால் தங்களிற்குக் கருத்துப் போட முடியவில்லை.
  கூகிள் கணக்கே வருகிறது.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 3. தேவதைகள் என்றுமே தேவதைகள்தான். அவர்களின் தீர்ப்பை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 4. நிச்சயமாக உங்கள் சின்னவளின் தீர்ப்பு தீர்ப்புதான்! பேசாம அடங்கி அவ சொன்னப் பேச்சக் கேளுங்க. என்ன சின்னவளே உங்கள் தந்தை அடம்பிடிக்கின்றாரா?!!! ஹ்ஹஹ

  பதிலளிநீக்கு
 5. எங்கள் வீட்டிலும் அடிக்கடி நடக்கும் விடய்ம இது. நம்மிடமிருந்து வாங்கி சேமிப்பதே நம் தேவைக்கு பத்து ரூபாய் கொடு என கேட்டால் ஆயிரம் சாக்குபோக்கும் பத்துக்கு பத்து சேர்த்து இருபதாக்கும் திறனும் ஏதோ வட்டிக்கு கடன் வாங்கியதைபோல் அடிதடி ஈட்டிக்காரன் ரேஞ்சில் நம்மை நிறுத்துமே இந்த தேவதைகள்.

  அசத்தல். நினைவுகளை பின்னோக்க செய்யும் பதிவு

  பதிலளிநீக்கு
 6. அன்பெனும்
  மனச்சிறை போதாதென்று
  குளியலறையிலும் சிறையா

  அப்பில் இல்லா தீர்ப்புதான்

  பதிலளிநீக்கு
 7. தீர்ப்புக்கு மறு பேச்சே இல்லை... தேவதைகளின் தீர்ப்பாயிற்றே...

  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு