வியாழன், 19 நவம்பர், 2015

நீ சொன்னா....

காட்டாற்று வெள்ளமென
கரை 
புரண்டு வருகிறது 
கவிதை அலைகள்.குறுமுனியென 
குடிக்கத்தான் 
ஆசை.

பெருமூச்சில் 
நகரும் வாழ்வில்,
அது
இந்த 
முட்டாளுக்கு
முடியாத வார்த்தை.

ஓரமாய் நின்று
நக்கித்தான் 
தீர்க்கவேண்டியிருக்கிறது
வேட்கை.

சின்னவள்
இன்றென்னை
அழைத்தது 
சரிதான்..


தோ...தோ...

9 கருத்துகள்:

  1. தோ தோ...தோ...என்று அழைத்ததும் ஓடி வந்தது அந்தக் குட்டிச்செல்லம் மட்டுமல்ல உங்கள் கவிதையும் வந்து ஒட்டிக் கொண்டது!

    பதிலளிநீக்கு
  2. கவிதை கவிதையை அழைத்ததா

    பதிலளிநீக்கு
  3. அழகு..... தோ தோ என அழைத்தது சின்ன மகள் அல்லவா!

    பதிலளிநீக்கு