ஞாயிறு, 22 நவம்பர், 2015

முடியில்லா காலம்.....

சின்னவள்
எப்போதும்
என்
சிரம் பற்றி
ஆட்டுவாள்

என்
உச்சி முடி
அவளுக்கே
என்பதனால்
அதை
கணிசமாய்
நான் குறைப்பதில்லை.....

மொட்டையடித்த
ஒரு நாளில்
தட்டிப்பார்த்து
தள்ளி
நகர்ந்து விட்டாள்

உண்மையில் 
அந்த நாட்கள்
ஒரு மயிரும்
இல்லா நாட்கள்.......

8 கருத்துகள்:

 1. அப்பாவிற்கு சிகையலங்காரம் செய்து விடுவது மகளுக்கு ஒரு பிடித்த விஷயம். அவள் செய்யும் அத்தனை விஷயங்களையும் பிடித்திருக்கிறதே.......

  அருமை செல்வா...

  பதிலளிநீக்கு
 2. சின்னவள் சிரிக்கிறாள் எப்போதும்
  உன் புன்னகை வழியும் உதடுகளால்....!

  பதிலளிநீக்கு
 3. உணர்வுகளை எழுத்தில் கொண்டுவருவது மிக எளிதல்ல ஆனால் அதையும் நீங்கள் சாதித்து இருக்கிறீர்கள் . படித்து முடித்தவுடன் ஆஹா என்றுதான் சொல்லத் தோண்றுகிறது. பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 4. //உண்மையில்
  அந்த நாட்கள்
  ஒரு மயிரும்
  இல்லா நாட்கள்.......//

  அருமை..! அருமை..!
  எங்கோ கொண்டு போகிறது கவிதை..!

  பதிலளிநீக்கு
 5. ஹஹ அந்த இறுதிவரிகள் அட! ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து நீங்கள் எழுதுவதுதான்....அருமை செல்வா...

  பதிலளிநீக்கு