வியாழன், 19 நவம்பர், 2015

கூகுள் மாயக்கண்ணாடியல்ல....

அன்பின் சக்திக்கு,
நம் போன்றோர்கள் எந்தத் தேடலுக்கும் மிக எளிதாய் கூகுள் என்னும் பொறியில் மிக வேகமாக மாட்டிக்கொள்கிறோம்.



“உள்ளதை உள்ளபடி காட்டும் மாயக்கண்ணாடியே, உலகின் பேரழகி யார் என்றால், காட்டும் ஒரு கன்ணாடியை உன் காலத்திரைப்படங்கள் காட்டியிருக்காது...நாங்கள் பார்த்திருக்கிறோம்.
அது எப்போதும்   வில்லன்களின் கைகளில் தான் இருக்கும்.

 சமீபத்தில் சில தரவுகளுக்காக நானும் தேடினேன் கூகுளில்.
எத்தனை தகவல்கள்,,ஆதாரங்கள்,மலைக்கவைக்கும் தொடர்புச்செய்திகள்.

ஆச்சர்யம் சக்தி!
இணயத்தின் வேகம் பொறுத்து சட்டென கொட்டும் குவியலாய் தகவல்கள்.

எங்கள் காலத்தில் சில செய்திகளுக்காக பல புத்தகங்கள் புரட்டவேண்டியிருக்கும்.விசயங்கள் தேடிப்போய் வாத்தியார் வீட்டில் வீட்டுவேலை செய்துவந்த அனுபவங்களும் உண்டு.
அறிவியல் உங்களை அ்லைக்கழிக்க வைக்கவில்லை.
நீ உட்கார்ந்த இடத்தில் ஓடிவருகிறது உலகம்.
என்ன தகவல் உனக்கு வேண்டும்? நீ என்ன தகவல் சொல்ல வேண்டும் உலகிற்கு?
நொடிகளில் நடக்கிறது  எல்லாம்

நன்று சக்தி...
ஆனாலும் மாயக்கண்ணாடி வில்லன்களிடமிருந்தது போல் கூகுள் என்னும் அட்சயப்பாத்திரமும், சிலர் செய்கைகளால் குப்பைகள் நிரம்பி...

அதீத ஆர்வமோ. அல்லது எல்லாம் எனக்குள் என்னும் கெட்ட குணமோ...
பல தவறான தகவல்களைப் பதிவு செய்து விடுகின்றனர்.
அதனைப் பயன்படுத்தும் எத்தனை பேர்களை காயப்படுத்திவிடுகிறது?

ஒன்றிரண்டு கேள்..
மண்ணுக்கு மரம் பாரமா... எழுதியது பி.கே. முத்துசாமி..இணையத்தில் ஐந்து கவிஞர்கள் பெயரில் இருக்கிறது.
குற்றம் புரிந்தவன்... கு.சா.கிருஸ்ணமூர்த்தி எழுதியது...வேறொருவர் பெயரில் இருக்கிறது.
வாழ்நாள் முழுதும் சாதியத்திற்குப் போராடும்  பொன்னீலன் பற்றிய குறிப்பில்
நாடார் சாதியில் பிறந்தவர் என இருக்கிறது.
எவன் கேட்டது? யார் போட்டது?

கண்ணுக்கு முன் நமக்குத்தெரிந்த சிலவே இப்படி மாறியிருக்கும் போது தெரியாத எத்தனை மாறியிருக்கலாம்?

சக்தி! உனக்கான தகவல்களுக்கு கூகுளைப்பயன்படுத்து..ஆனால் அதை இறுதிப்படுத்தி விடாதே...
வேறென்ன செய்யப்போகிறாய்?
நான் சொல்லவில்லை... அய்யன் வள்ளுவர் சொல்கிறார்.

“எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

இணையத்திற்காகவே எழுதியது போல் இருக்கிறது.
இருக்கலாம்.

அன்புடன்,
செல்வக்குமார்.

13 கருத்துகள்:

  1. கவிஞரே ..கவிதயைப்போலவே கட்டுரையிலும் கலக்குகிறீர்கள்..!
    இனி,உங்களைப் போன்ற நல்லவர்களின் கைகளில் வசப்படும்..!

    பதிலளிநீக்கு
  2. கூகுள் தேவதை வள்ளலாய் அருளினாலும், சில சமயங்களில் சாத்தானாகவும் மாறுகின்றது. சிலசமயங்களில் தேவதை போல் காட்சிதந்து உள்ளுக்குள் சாத்தானாய் பயமுறுத்துகின்றது. நல்லதை மட்டும் மெய்ப்பொருளை மட்டும் தெரிந்து கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  3. அருமை நண்பரே நல்ல செய்தியை அறியத் தந்தீர்கள்

    பதிலளிநீக்கு
  4. எதிலும் எதற்கும் கவனம் தேவை...

    குறளுடன் சொன்னது மிகவும் அருமை...

    பதிலளிநீக்கு
  5. தலைப்பே அருமை

    பதிலளிநீக்கு
  6. அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை!

    பதிலளிநீக்கு
  7. கூகுள் எனும் சாத்தான் பல சமயங்களில் கூரிய பற்களை வெளிப்படையாகவே காட்டி பயமுறுத்துகிறது.....

    நல்ல பகிர்வு செல்வா.....

    பதிலளிநீக்கு