ஞாயிறு, 22 நவம்பர், 2015

நீ.. சொல்லிக்கொடுத்து?

அன்பின் சக்திக்கு,
மழை பற்றிய சஞ்சலங்களிலிருந்து கொஞ்சம் விடுபட்டு,முடிக்க வேண்டிய பாடங்களுக்காக உன் கல்லூரியும்,படித்தே ஆக வேண்டிய பாடங்களுக்காக நீயும் விடுமுறைகளையும்  வெறுக்க ஆரம்பித்திருக்கும் மனோநிலையிலிருப்பாய்.

கவலைப்படாதே,
நம் கல்வி நிறுவனங்கள் எல்லாவற்றுக்கும் தயாராய் இருப்பார்கள்.அடுத்த வருட சேர்க்கைக்காக ..இப்போதே சரிசெய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

பல்கலைக்கழகம் என்றதும் உனக்கு சில உண்மையான பல்கலைக்கழகங்களை சொல்லலாம் என நினைக்கிறேன்.

உனக்குத்தெரியுமா...உலகின் முதல் பல்கலைக்கழகம் நம் பண்டைய இந்தியாவின் தஷிலா என்பதே...கி.மு 600இல் இருந்து கி.பி 500 வரை இயங்கியதாம்.. 68 பாடங்கள்,
ஆசிரியர்கள் மிகவும் அறியப்படும் சாணக்கியர்,பனினி, இப்படி...

சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் இங்கே இயற்றப்பட்டிருக்கிறது.

அடுத்தது நாலந்தா...
கி.பி 5ம் நூற்றாண்டிலே தொடங்கப்பெற்றது. 3700 துறவிகள் உட்பட பத்தாயிரம் மாணவர்கள்..

அத்தனை கட்டடங்கள்..
ஆச்சர்யம் சக்தி ,
அதிலொன்று ஒன்பது மாடிக்கட்டடம்...

பக்கத்திலே நம் காஞ்சியிலே அதற்கு நிகராக ஒரு பல்கலைக்கழகம் இயங்கியிருக்கிறது.
பன்னாட்டு மாணவர்கள் படித்திருக்கிறார்கள்.அந்தக்காஞ்சிக்கடிகையை சீனத்து அறிஞன் யுவான் சுவாங் பதிவு செய்திருக்கிறான்.

அடடா நம் பல்கலைக்கழகங்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கின்றன.
வான சாஸ்திரங்கள்,கணிதங்கள்,
மருத்துவம்,போர்க்கலை,
என எத்தனை துறைகளில் கொடிகட்டிப்பறந்திருக்கின்றன...

பெருமூச்சு வருகிறது சக்தி...
நூற்றாண்டுகளில் வாழ்ந்திருக்கின்றன.

நேற்று பெய்த மழையிலே நம் மழையில் நம் பல்கலைக்கழகங்களில் படங்கள் பார்க்கும் போது
கசப்பாயிருக்கிறது.

உங்கள் கட்டிடங்கள் கட்டியிருக்கும் அழகு இப்படி இருக்கும் போது நீங்கள் எப்படி தரமான கட்டட கலைஞனை உருவாக்க?

வந்த மழையை காப்பாற்றாமல்  காணாமல் போன உங்கள் அடித்தளங்களா மாணவச்செல்வங்களுக்கு நல்ல அடித்தளங்கள் ஆகப்போகிறது?

ஏரிளுக்குள் முளைத்த உங்கள்  கட்டடங்களுக்குள்ளா நீர் மேலாண்மை பயில்கிறார்கள் எங்கள் பிள்ளைகள்?
சேறுகள் படிந்த குளங்கள்
தூர்த்த உங்கள் கைகளிலா எங்கள் குலக்கொழுந்துகள்?

இன்னும் எத்தனை வெளிச்சங்களை காட்டிப்போயிருக்கிறது இந்த பெருமழை?

சக்தி!
இந்த மழை நல்லது செய்தது..
நம் எல்லாரையும்
யோசிக்க சொல்லி அழுதுதான் போயிருக்கிறது




8 கருத்துகள்:

  1. வெளிச்சங்கள் மனதில் உள்ள இருட்டை போக்கினால் சரி...

    பதிலளிநீக்கு
  2. ////ஏரிளுக்குள் முளைத்த உங்கள் கட்டடங்களுக்குள்ளா நீர் மேலாண்மை பயில்கிறார்கள் எங்கள் பிள்ளைகள்////
    வெட்கப்பட வேண்டிய உண்மை நண்பரே

    பதிலளிநீக்கு
  3. அன்றைய பெருமைகளை எல்லாம் இன்று ஆழ குழி தோண்டி புதை்த்துவிட்டார்கள்...

    பதிலளிநீக்கு
  4. ஆறுகள் அழும் சத்தம் அரைநொடி கூட காதில் வாங்கியதில்லை செல்வம் சேர்க்கும் செவிடர்கள்!

    பதிலளிநீக்கு
  5. அழுத்தமான அவசியமான பதிவு..

    பதிலளிநீக்கு

  6. உங்களின் பதிவுகள் மிகவும் மாறுபட்ட சிந்தனைகளில் வெளிவரும் அருமையான படைப்பு.......

    பதிலளிநீக்கு
  7. அருமை செல்வா....அருமை. பெரியவளுக்குச் சொல்லிப் போகிற போக்கில் தகவல்களையும் கொடுத்து, கூடவே இப்போதைய பல்கலைக்கழகங்களின் மீதான ஆதங்கத்தையும் வெளியிட்டு....ஆமாம் ..இயற்கையின் சீற்றம் எதற்குச் சீரியது என்றால்...இனியாவது திருந்துங்களேன் என்று சொல்லிச் சென்றுள்ளது....இது ஒரு எச்சரிக்கைதான்...மீதம் எங்கள் தளத்துப் பதிவில் தயாராகின்றது...

    பதிலளிநீக்கு
  8. மிதக்கும் கல்லூரிகள்....

    உங்கள் ஆதங்கம் எனக்குள்ளும்...

    பதிலளிநீக்கு